கொரோனா:யாழில் 24 வயதுடைய மன்னார் இளைஞன் மரணம்!

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிட்-19 நோயாளிகள் இருவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

காரைநகரைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த 24 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இருவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின்தகனம் செய்யப்பட்டன.

No comments