கப்பலை மூழ்கடிக்க சதியாம்?தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலினை நடுக்கடலிற்கு கொண்டு சென்று மூழ்கடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றனன.

எனினும் கப்பலின் கப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பாக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ தென்னகோன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதி சொலிசிட்டர் நாயகம் சமர்ப்பித்த ஆவணங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான் சந்தேகநபர்களான கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோரை எதிர்வரும் 07 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

எனினும் குறித்த கப்பலை இலங்கை கடற்பரப்பினுள் அனுமதித்தமை தொடர்பில் உள்ள பலம் வாய்ந்த அரசியல் தரப்புக்களே கப்பலை  நடுக்கடலிற்கு கொண்டு சென்று மூழ்கடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.No comments