புலம்பெயர் உதவி வேண்டாம்:அங்கயனின் கையாள் மகேசன்!

 இலங்கை அரசிற்கு புலம்பெயர் தமிழ் உறவுகளிடமிருந்து பணம் பெற்று தடுப்பூசி வாங்க உதவப்போவதாக ஒருபுறம் எம்.ஏ.சுமந்திரன் சவால் விட மறுபுறம் அங்கயன் இராமநாதனோ புலம்பெயர் உதவிகளை முடக்க முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இலங்கை அரசால் முதல் வழங்கப்பட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு தகுதியானவர்களுக்கு போய்ச்சேரவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. 

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னார்வமாக வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யும் தன்னார்வத் தொண்டர்களுக்கு தடை போடுவதில் மாவட்ட செயலகம் முன்னின்றுவருகின்றது.

நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரம் யாழ் மாவட்டத்திற்கு வழங்குவதற்கு பிரதேச செயலகம் உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள் அக்கறை காட்டாமல் அசமந்த போக்காக இருக்கின்றார்கள் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நிவாரணம் வழங்குவதாக இருந்தால் பிரதேச செயலகத்தில் ஒப்படையுங்கள் .நாங்கள் வழங்குகிறோம் என்று செயலக அதிகாரிகள் கூறுகின்றார்கள். ஆனால் பொருட்களை தந்தவர்களுக்கு நாங்கள் பிரதேச செயலகத்தில் ஒப்படைத்து விட்டோம் என்று எவ்வாறு கூற முடியும் .எனவே பொருட்களை நேரடியாக தன்னார்வ தொண்டர்கள் மக்களிடம் கையளிப்பதன் ஊடாகவே கொடை யாளர்களுக்கு நாம் பொறுப்பு கூற முடியும்  என தெரிவிக்கின்றார் சமூக செயற்பாட்டாளர் கிருஸ்ணமேனன்.ஏற்கனவே அரசாங்கத் திணைக்களங்களில் பல பொருட்கள்  குடோன்களில் கிடந்து வீணாகிப் போகின்றது .ஒரு வாரத்திற்கு முன்பாக கொடுப்பதாக அறிவித்து 5 ஆயிரம் ரூபா கூட இன்னும் கைகளுக்குப் போய் சேரவில்லை.வெறும் ஊடக அறிவிப்பு மட்டும் தான் செய்திருக்கிறார்கள் என்கிறார் சிவநேசன் எனும் மற்றொரு செயற்பாட்டாளர்.

ஏற்கனவே இவ்வாறு வழங்கிய பொருட்களை தனது ஆதரவாளர்கள் மூலம் விநியோகித்து அரசியல் செய்த அங்கயனே இத்தடைக்கு காரணமெனப்படுகின்றது.

இந்நிலையில் அங்கயனின் ஆலோசனையில் யாழ்.மாவட்ட செயலர் விடுத்த ஊடக அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.


No comments