கொரோனா சூழ்நிலையைப் பயன்படுத்தி இடங்களை விற்கும் அரசாங்கம்

கொரோனா  நிலைமைகளுக்கு மத்தியில், அரசாங்கம் கொழும்பில் உள்ள இடங்களை சூட்சுமமாக அரசாங்கம்

விற்பனை செய்வதற்குத் தயாராகி வருதாகக் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒரு அங்குலத்தைக்கூட வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்போவதில்லை எனக்கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடமிருந்து, நாட்டின் பெறுமதி மிக்க இடங்களைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஹர்ஷன ராஜகருணா மேலும் தெரிவித்தார்.

 நாடு ஆபத்தான நிலையில் இருக்கிறது. நாட்டைக் காப்பாற்றுவதற்காக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த வீரர்கள், நாட்டைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு வந்தவர்களிடமிருந்து நாட்டின் வளங்களைப் பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றம் கூட்டப்படாத நேரத்தில், ஊடகங்களுக்குத் தெரியாது கொழும்பில் கோட்டையில் உள்ள பெறுமதியான இடங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளதாகவும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடமிருந்து மீட்கப்போவதாகக் கூறினார்கள்.

ஆனால் ஆட்சிக்கு வந்ததுமே ஷங்கிரில்லா ஹோட்டலுக்கு அருகில் இருந்த இடத்தை விற்பனை செய்தார்களெனவும் சாடினார்.

இந்த நண்பர்களே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாவதற்கு நிதியை செலவிட்டதாகவும் தெரிவிக்கும் அவர், இந்த நண்பர்களை மகிழ்விப்பதற்காக நாட்டின் இடங்களை விற்பனை செய்கிறார்கள். இது தவறெனவும் கூறினார்.

No comments