மட்டக்களப்பில் கரையொதுங்கிய டொல்வின் மற்றும் ஆமைகள்!


மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும் ஒரு டொல்பின் மீனும் இன்று (19) கரை ஒதுங்கியுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதில் இருந்து இதுவரை 40 இற்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும், 05 டொல்பின்களின் உடல்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கரையொதுங்கியுள்ளன.

கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.

No comments