திமிங்கிலம் விழுங்கிய நபர் அதிசயமாக உயிர் தப்பினார்!


அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸில் வசிக்கும் 56 வயதான மைக்கேல் பேக்கர்டு என்ற மீனவர் 40 வருடங்களாக கடலுக்குக்குள் நீந்தி இறால் பிடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை கடலுக்குள் நீந்தி இறால் பிடிக்க சென்றுள்ளார். அப்போது 36 டன் எடையுள்ள ஒரு திமிங்கிலம் அவரை விழுங்கியது. 

ஆனால் விழுங்கிய 40 விநாடிகளுக்குள் திமிங்கிலம் மைக்கேலை துப்பியதால் அவர் உயிர் பிழைத்தார். காயங்கள் இருந்தாலும் உடலில் எலும்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.

மேலும் இதுகுறித்து,மைக்கேல் பேக்கர்டு கூறுகையில்:-

அவ்வளவு தான் எனது வாழக்கை முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டு, எனது மனைவி மற்றும் 2 மகன்களை நினைத்துக்கொண்டேன். ஆனால் சில நொடிகளில் நான் கடலில் மேற்பரப்புக்கு வந்துவிட்டது தெரிந்தது. நான் விடுவிக்கப்பட்டதை உணர்ந்தேன், கடல் பரப்பில் மிதந்து கொண்டிருந்தேன்.

இப்போது நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என பேக்கர்டு கூறினார். நான் சுமார் 30 முதல் 40 விநாடிகளில் திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் இருந்தேன். அப்போது, நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால்,அதன்பின்னர் திமிங்கிலம் என்னை துப்பியது.

வடகிழக்கு மசசூசெட்ஸ் மாநிலத்தில் இறால் தேடி கடலுக்குச் சென்றபோது ஏதோ ஒன்று தள்ளிவிட்டதுபோல இருந்தது. அடுத்த கணம் கும்மிருட்டு. சுமார் பத்து அடி கடலுக்குள் அவர் சென்றிருக்கிறார்.

திமிங்கிலத்தின் வாயினுள் அவர் ஏற்படுத்திய அசைவுகள் அது வாயைத் திறப்பதற்கான காரணம் என அவர் நம்புகிறார்.

No comments