திருகோணமலையில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு!


திருகோணமலை தம்பலகாமம் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு ஈச்சங் குளம் காட்டுப் பகுதியை அண்மித்த பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யானை சுமார் 30_35 வயது மதிக்கத்தக்க ஆண் கொம்பன் யானை காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதேவேளை குறித்த யானையானது இரு வாரங்களுக்கு முன்னர் பன்றிக்கு வைக்கும் ஒரு வகை வெடியை உட்கொண்டு தொண்டையில் சிக்கியதால், உணவு உட்கொள்ள முடியாத நிலையில் உயிரிழந்திருக்கலாம் என வன ஜீவராசிக  அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments