சுட்டுக்கொலை:காட்டுப்பன்றியென விளக்கம்!

இலங்கை மாத்தளை பொல்வத்த பிரதேசத்திலுள்ள  மிளகுத் தோட்டமொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் ஒருவர், தோட்ட உரிமையாளரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது நேற்று  (8) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பொல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான கயான் ஜயவர்தன என்ற இளைஞரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

எனினும் காட்டுப்பன்றியே தனது மிளகுத் தோட்டத்துக்குள் நுழைந்து விட்டதாக நினைத்தே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தோட்ட உரிமையாளர் தெரிவித்துள்ளதுடன், துப்பாக்கியுடன் சரணடைந்துள்ளார்.

எனினும் நாடளாவிய முடக்க மத்தியில் குறித்த இளைஞன் கொல்லப்பட்டமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.


No comments