மீண்டும் பிடித்துக்கொடுக்கின்றது ஜெர்மன்!அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை நாடுகடத்த ஜெர்மன் மும்முரமாக உள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் ஜெர்மன் அரசினால் நாடுகடத்தப்பட்ட இலங்கை தமிழ் ஏதிலிகள் பற்றி தகவல்கள் இல்லாதேயுள்ளது.

இலங்கை புலனாய்வு கட்டமைப்பினால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில வைத்து பொறுப்பேற்கப்பட்ட அவர்கள் பற்றி இன்றுவரை தகவல்கள் இல்லை.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 9 ஆம் தேதி மேலுமொரு தொகுதி ஏதிலிகளை நாடுகடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே ஜெர்மன் அரசாங்கத்தின் இந்த திட்டத்தை நிறுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நாடுகடத்தல் முகாமில் அடைக்கப்பட்டுள்ள அவர்களில் சிலர் தாம் நாடு கடத்தப்படுவது தொடர்பில் அறிந்திருப்பதாக செயற்பாட்டாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.

No comments