கொரோனா :பணிகளிற்கு மறுப்பு!மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கொரோனா தொடர்பான பணிகளில் இருந்து இன்று புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தமது ஏனைய பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட பொதுச் சுகாதார பிரிசோதகர் சங்கத் தலைவர் சிவசேகரம் சிவகாந்தன்  தெரிவித்தார்.

 பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரை தொலைபேசியூடாக மிகக்கடுமையான அச்சுறுத்திய சம்பவமொன்று மட்டக்களப்பு ஆரையம்பதி சுகதார வைத்தியதிகாரி பிரிவில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பொதுச் சுகாதார பரிசோதகரை அச்சுறுத்திய நபரை கைது செய்யும் வரை கொரோனா தொடர்பான பணிகளில் இருந்து விலகுவதாக மட்டக்களப்பு மாவட்ட பொதுச் சுகாதார பிரிசோதகர் சங்கத் தலைவர் கூறினார்.

No comments