இலங்கை:பால்மாவுக்கும் பஞ்சம்?

 


இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்க கோத்தா அரசு மறுத்துவருகின்ற நிலையில் சந்தைகளில் பால்மா தட்டுப்பாடு ஏற்படுமென பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, உள்நாட்டிலும் ஒரு கிலோ பால்மாவின் விலையை 350 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலையை 140 ரூபாவினாலும் விலை அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் அச்சங்கம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலக சந்தையில் பால்மாக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், சில நிறுவனங்கள் புதிதாகப் பால்மாக்களை இறக்குமதி செய்வதை முற்றிலும் நிறுத்தியுள்ளதோடு, சில நிறுவனங்கள் பால்மா இறக்குமதியை 30 சதவீதத்தாலும் குறைத்துள்ளது.

எனவே, பால்மா விலைகளை அதிகரிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம், விடுக்கப்பட்டுள்ள  கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றால், நாட்டில் பால்மா தட்டுப்பாடு ஏற்படுமெனவும் பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் சங்கம் எச்சரித்துள்ளது.


No comments