ஊடகவியலாளர் நிமலின் தாயார் மறைந்தார்!

தமிழ் தேசியப்பரப்பில் முதன் முதலாக ஊடக சுதந்திரத்திற்காக காவு கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் தாயார்

லில்லி திரேஸ் மயில்வாகனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மயில்வாகனம் அவர்களின் பாசத்திற்குரிய மனைவியான லில்லி திரேஸ், பிரேமராணி, கமலராணி, செல்வராணி, நிமலராணி, ஆகிய நான்கு பெண் குழந்தைகளினதும் ஒரேயொரு மகனான காலம்சென்ற ஊடகவியலாளர் நிமலராஜனினதும் தாயார் ஆவார்.

நிமலின் படுகொலையின் பின்னராக பாதுகாப்பு அச்சுறுத்தல் மத்தியில் கனடாவிற்கு குடும்பத்தவர்களுடன் புலம்பெயர்ந்திருந்த அவர் தனது மரணம் வரை மகனின் படுகொலைக்கான நீதி கோரிய பயணத்தில் தளராது நடைபோட்டு வந்திருந்தார்.

அன்னாருக்கு யாழ்.ஊடக அமையம் உள்ளிட்ட தாயக ஊடக அமைப்புக்கள் பலவும் தமது அஞ்சலியை வெளியிட்டுவருகின்றன.


No comments