கொழும்பில் மீண்டும் கப்ப கும்பல்!மீண்டும் கொழும்பில் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் பேசுவதாக தொலைபேசி மூலம் அழைத்து, கப்பம் கேட்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இத்தகைய குற்ற கும்பல்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளவர்களை தனக்கு தகவல் தரவும் கோரியுள்ளார்.

2015 இற்கு முற்பட்ட காலப்பகுதியில் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் பேசுவதாக தொலைபேசி மூலம் அழைத்து, கப்பம் கேட்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments