பயணக் கட்டுப்பாடு! மாதர் சங்கக் கட்டிடம் உடைத்து திருட்டு!


பயணக் கட்டுப்பாடு உள்ள நிலையில் கிளிநொச்சி, திருநகர் வடக்கு மாதர் சங்கத்தின் கட்டிடம் உடைக்கப்பட்டு  கிளிநொச்சி மாவட்ட மாதர் சங்கங்களின் தளபாடங்கள் திருநகர் வடக்கு மாதர் சங்கத்தின் தளபாடங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தின் உபகரணங்கள் போன்றன களவாடப்பட்டுள்ளன. 

தையல் இயந்திரம் கதிரைகள் மற்றும் குழந்தைகளை நிறுத்தும் தராசு போன்றவை காணமல் போயுள்ளதாகவும் குறித்த களவு தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை காலை 10 மணிக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்வதாகவும் மாதர் சங்கத்திடம் பொலிஸார் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.


சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் 600 மீட்டர் தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments