வியாழன் 55:ஜனாதிபதி சொல்வது வேறு!நேற்று முன்தினம் 17 ஆம் திகதி 55 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதி செய்யப்பட்டன. இதில் 23 பெண்கள் மற்றும் 32 ஆண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் மொத்த மரண எண்ணிக்கை 2,480 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அரசாங்க தகவல் திணைக்களம் கொரோனா மரணங்கள் தொடர்பில் தனக்கு தவறான தகவல்கள் தரப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இம்மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற கொரோனா மரணங்களின் எண்ணிக்கை, 15 மட்டுமே ஆகும். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, 101 மரணங்கள் அன்றைய தினம் பதிவாகவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் வியாழக்கிழமை 55 பேர் மரணித்துள்ளமை ஜனாதிபதியின் கருத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments