ஆளுக்கொரு சட்டம்:கோத்தா மீது சீறும் சிங்கள நெட்டிசன்கள்!

 


கொரோனா நடமாட்ட தடையினை தாண்டியதாக பொதுமக்களை கொர கொரவென வீதிகளில் இழுத்துச்சென்று சிறைகளில் போட்டது கோத்தபாய அரசு. 

யாழ்ப்பாணத்தில் தொடங்கி கொழும்பு வரை பொலிஸார் மக்களை வீதிகளில் தரதரவென இழுத்துச்சென்று படம் காட்டியிருந்தனர்.

ஆனால் பிரபல கவர்ச்சி நடிகையென்றால் பொலிஸ்காவலுடன் விருந்தினராக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ள அதே கோத்தபாய அரசு.

நேற்றைய தினம் நட்சத்திர விடுதியில் மதுபோதையில் ஆண் நண்பருடன் கைதான கவர்ச்சி நடிகையினை பிணையில் விடுவிக்க முடிகின்றதென்றால் சட்டம் ஏழை சிங்கள மக்களிற்கு ஒன்று கவர்ச்சி நடிகைக்கொன்றாவென கேள்வி எழுப்பியுள்ளனர் சிங்கள நெட்டிசன்கள்.


No comments