24 இலட்சத்து 87 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தடுப்பூசி!இலங்கையில் இதுவரை 24 இலட்சத்து 87 ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் 5ஆயிரத்து131 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரையில் 14 இலட்சத்து 48 ஆயிரத்து 601 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 15 ஆயிரத்து 278 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 70 ஆயிரத்து 870 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 385 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 72 ஆயிரத்து 675 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம், நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து13 ஆயிரத்து 454 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் நேற்றைய தினம் 22 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

No comments