தமிழகத்தில் மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற இலங்கையர்!


இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை தமிழகத்தின் காந்திமா நகரில் திங்கள்கிழமை இரவு கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரை கைதுசெய்ய காவல்துறையினர் நான்கு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளனர். இலங்கைக்கு கடல்வழியாக தப்பிச் செல்வதை தடுக்க இராமேஸ்வரம் பகுதியில் சிறப்பு அணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

49 வயதான லவேந்திரன் என்ற நபர் தனது 32 வயதான மனைவி கவிதாவை திங்கட்கிழமை இரவு 10 மணியளவில், காந்திமா நகரில் உள்ள அவர்களது வாடகை வீட்டில் வைத்து கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக சரவணம்பட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கவிதா, தனது முதல் கணவரிடமிருந்து பிரிந்த பின்னர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு லாவேந்திரனை மணந்து கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) இன் கீழ் பொலிஸார் சந்தேக நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவையில் செல்போனில் அடிக்கடி ஆண் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த மனைவியை, கணவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கணபதி அடுத்த காந்திமா நகர் மூன்றாவது விதியை சேர்ந்தவர் குமார் என்கிற லவேந்திரன்(49). இவரது மனைவி கவிதா (32). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி பூபதி என்ற மகன் உள்ள நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இலங்கை தமிழரான லவேந்திரனை திருமணம் செய்து கொண்டு மகனுடன் வசித்து வந்தார். மேலும், குமார் மூலம் இவருக்கு யோசுவா என்ற மகன் பிறந்துள்ளார்.

லவேந்திரன் பழைய கட்டிடம் இடிக்கும் பணி செய்து வருகிறார். கவிதா வீட்டின் அருகிலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கவிதா செல்போனில் அடிக்கடி நண்பர்களுடன் பேசி வந்ததால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கவிதா கோபித்துக்கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி, நண்பர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிய கவிதாவுக்கும், லவேந்திரனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த லவேந்திரன் கிரிக்கெட் மட்டையால் கவிதாவை சரமாரியாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே கவிதா உயிரிழந்தார். இதனை அடுத்து, லவேந்திரன் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினார். இதனை கண்ட கவிதாவின் உறவினர் சௌந்தரராஜன் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடதிற்க்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கவிதாவின் உறவினர் சௌந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறையினர் தப்பியோடிய லவேந்திரனை தேடி வருகின்றனர்.

No comments