பின் கதவால் வந்தார் ரணில்! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபை அமர்வுகளில் பங்கேற்றார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு முடிவடைந்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பக்கம் முன்வரிசையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஊடாகவே ரணில் சபைக்கு வந்தார்.

No comments