தளர்வு:மதுபான நிலையங்கள் முன்னால் தள்ளுமுள்ளு!கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை  இன்று காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளநிலையில் மதுபானச்சாலைகள் நிரம்பிவழிகின்றன. 

வடகிழக்கில்; அத்தியாவசிய உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள், வங்கிகள், மதுபான நிலையங்கள் உட்பட அனைத்து வியாபார நிலையங்களும் இன்று திறந்திருந்தன.

இதனால் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் பல்வேறு தேவைகள் நிமித்தமும் அதிகமாக மக்கள் ஒன்று கூடியமையால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தனியார் மற்றும் அரச பேருந்துகள் வடக்கு மாகாண ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது சேவைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களிற்கு பின்பாக மதுபாண நிலையங்கள் திறந்திருக்கின்றமையால் அதனை கொள்வனவு செய்வதற்கு மதுபான நிலையங்களின் முன்பாக அதிக கூட்டம் கூடியுள்ளது.

இந்நிலையில் அளவுக்கு மீறி மதுபான கொள்வனவில் ஈடுபடுவதை காவல்துறை தடுத்துவருகின்றது.No comments