வவுனியா:ஆடைத்தொழிற்சாலை பேரூந்து மீது தாக்குதல்!

 


இலங்கையில் முடக்கத்தின் மத்தியில் ஆடைத்தொழிற்சாலைகளை மட்டும் இயக்க இலங்கை அரசு அனுமதித்துள்ளது.

எனினும் இத்தகைய ஆடைத்தொழிற்சாலைகள் மூலம் கொரோனா கொத்தணி ஏற்படுவதாக மக்கள் அச்சங்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்து சென்ற பேரூந்து மீது இன்று காலை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இச்சம்பவத்தில் சாரதி காயமடைந்துள்ளார்.ஏற்கனவே கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆடைத்தொழிற்சாலைகள் விவகாரம் கொதிநிலையிலுள்ள நிலையில் வவுனியா ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்து சென்ற பேரூந்து மீது இன்று காலை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.


No comments