பிரான்சு சுவசி லு றுவா நகரசபைக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு

பிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான சுவசி லு றுவா நகரசபைக்கு முன்பாக கடந்த (12.05.2021) புதன்கிழமை பி.பகல் 14.00மணிக்கு

நினைவேந்தலும்,கவனயீர்ப்பும் நடைபெற்றது.

தமிழின அழிப்பின் 12 ஆவது ஆண்டின் இலங்கை தீவின் இன்றைய சிங்கள ஆட்சியாளர்கள் தொடரும் தமிழின அழிப்பு, நிலம்பறிப்பு, கைதுகள்,தற்கொலை கள் தொடர்ந்தும் தமிழ்மக்கள் படும் துன்ப துயரங்களை கூறும் துண்டுப்பிரசுரங்கள் பிரெஞ்சு மக்களுக்கு வழங்கப்பட்டது. அங்கு வாழும் தமிழ்மக்கள் பிராங்கோ தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து இவ்நாளை உணர்வுடன் நினைவுகூர்ந்தனர். தொடர்ந்தும் மே 17ம் திகதிவரை இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று 18ஆம் நாள் பாரிசின் மத்தியில் பேரணியும் வணக்க நிகழ்வும் கவயீர்ப்பும் நடைபெறவுள்ளது.

No comments