பிரான்சு புளோமினல் நகரத்தில் நினைவுக்கல் முன்பாக மே18 நினைவேந்தல்!

இன்று 16.05.2021 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு புளோமினல் மாநகரத்தில் நிறுவப்பட்ட நினைவுக்கல் முன்பாக மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இடம்பெற்றது. காலை 11.00 மணிக்கு பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

முதல்வர், துணைமுதல்வர் தமிழர் கட்டமைப்பினர், இளையோர் அமைப்பு பொறுப்பாளர், பரப்புரைப் பொறுப்பாளர் ஆகியோர் நினைவு உரையாற்றியிருந்தனர்.

நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கியிருந்தனர்.

No comments