பிரான்சு லாக்கூர்நொவ் நகரில் மே18 முள்ளிவாய்க்கால் நிகழ்வு

பிரான்சு லாக்கூர்னோவ் நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நண்பகல் 12.00 மணிமுதல் 14.00மணிவரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடர் , ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. நினைவுரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்கள், லாக்கூர்நொவ் மாநகர சபை உறுப்பினர்கள், லாக்கூர்நொவ் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகத்தினர், ஆசிரியர், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மழைக்கு மத்தியில் நினைவேந்தினர்.

No comments