பருத்தித்துறை கொட்டடியில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு!

பருத்தித்துறை கொட்டடி பகுதியில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு தப்பித்துள்ளனர்.

48 கிலோ 900 கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள், 2 மோட்டார் சைக்கிள்கள், படகு ஒன்று, அதற்கான வெளியிணைப்பு இயந்திரம் என்பவை மீட்கப்பட்டுள்ளன என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

சான்றுப்பொருள்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments