கல்லைக் கொடுத்து ஆசி பெற்ற உதயநிதி!



தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 153 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. அதிமுக 80 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிப்பதால், திமுகவின் வெற்றியை உறுதியாகி விட்டது. அடுத்த தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளது. இதனால்  தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒரு பெரிய கூட்டமே திரண்டு  ஊரடங்கு உத்தரவையும் மீறி  அலப்பறை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி உறுதியான நிலையில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரின் மகனும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் வெற்றியும் உறுதியாது.

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் சுமார் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.

இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மக்களை அதிமுக பாஜக அரசுகள் ஏமாற்றி வருவதாக கூறி, எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல் உடன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி, திமுகவின் வெற்றி உறுதியான நிலையில், ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், தனது வெற்றிக்காகவும் ஆசி  பெற்றார்.

No comments