குடத்தனையில் துப்பாக்கி சூடு!


மணல் கடத்தல்காரரை இலக்கு வைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் பயணித்த ஹண்டர் வாகனம் மீதே சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் வாகனம் விபத்துக்குள்ளாகியதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மணல் ஏற்றி வந்த ஹன்டர் வாகனத்தை சிறப்பு அதிரடிப் படையினர் மறித்துள்ளனர். இருப்பினும் கட்டளையை மீறி ஹன்டர் பயணித்தமையால் வாகனத்திற்கு சிறப்பு அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

அதில் பயணித்த மூவர் தப்பித்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments