யாழ்ப்பாணத்தில் மரணம்:28!இன்றும் ஒரு மரணம் யாழ்.மாவட்டத்தில் பதிவாகியுள்ளதையடுத்து  யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே பலாலி வடக்கில்   199 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக  யாழ் மாவட்ட செயலர்; க.மகேசன் தெரிவித்தார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இறுதியாக கிடைத்த பரிசோதனை முடிவின் படி  நேற்றைய தினமும் 52 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பலாலி வடக்கு கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் தொற்றாளர்கள்  அதிகம் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அந்தோணிபுரம் கிராமத்தினை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தி இருக்கின்றோம்.அதில் 199 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் .

தற்போதைய நிலையில் 2 ஆயிரத்து 123 குடும்பங்களைச் சேர்ந்த 5249பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும் யாழ் மாவட்ட செயலர்; க.மகேசன் தெரிவித்துள்ளார்.


No comments