கண்டி கொரோனா கைதிகள் யாழுக்கு!கண்டி-போகம்பர  சிறைச்சாலையில் கொரோனா தொற்றிற்குள்ளான கைதிகளை யாழ்.நகரிலுள்ள யாழ்.சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

போகம்பர சிறைச்சாலை கைதிகள் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுள் 211 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போதே, 104 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மன்னார் தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தை தனித்து பெண்களை அனுமதிக்கும் சிகிச்கை மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையினால் கூடுதலான பெண்கள் தொற்றுக்கு உள்ளாவதை கருத்தில் கொண்டு பெண்களுக்கான சிகிச்சை நிலையமாக தாராபுரம் இடைநிலை சிகிச்சை நிலையம் இயங்க உள்ளது.

ஒரே நேரத்தில் நூறு நபர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (19) முதல் மன்னார் தாராபுரம் துருக்கிச் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் பெண் தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது.


No comments