இலங்கை மக்களிற்கு நன்றி:இந்திய விமானங்கள் இரத்து!இந்திய மக்களை கொரோனா அபாயத்திலிருந்து பாதுகாக்க கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் மதங்கடந்த பிரார்த்தனைகளிற்கு  இந்திய தூதரகம் உணர்வுபூர்வமான நன்றிகளை தெரிவித்துள்ளது.

இந்தியா இலங்கை உறவை எவராலும் பிரிக்கமுடியாதென்பதற்கு இது சான்றெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் மறு அறிவித்தல் வரை,இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் பீ.ஏ.ஜயகாந்த தெரிவித்துள்ளார்.

இச்சேவைகள், நேற்று (5)  நள்ளிரவிலிருந்து  இரத்துச் செய்யப்படவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.No comments