நல்லூர் அரசடி முடக்கம்!

 


இலங்கையில் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படமாட்டாதென அரசு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாநகரின் நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த பகுதி ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகாலையில் தேர் உற்சவம் அனுமதியின்றி இடம்பெற்றிருந்தது. அதில் கலந்து கொண்ட ஒருவரே முதலில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

தற்போது, ஆலயத்திற்கு சென்ற பலர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். இன்னும் பலர் நோய் அறிகுறிகளுடன் உள்ளனர். தற்போது 24 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

முன்னதாக அரசடிப்பகுதியில் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில்; கடந்த ஒரு வார காலத்தில் 22 பேர்  அந்த பகுதியில்  தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அரசடி பகுதியினை முடக்குவதற்கு யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரியினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments