யாழிற்கும் சீன ஊசி:தூதரகம் பெருமை!

 


வடகிழக்கிற்கு இந்திய கொரோனா தடுப்பூசிகளிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் ஒருபுறம் கடிதமெழுத மறுபுறம் யாழ்ப்பாணத்தில் சீன ஊசிகள் ஏற்றப்பட்டமைக்கு சீன தூதரகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சீன மக்கள் நன்கொடையளித்த சினோபார்ம்  தடுப்பூசியில் 50ஆயிரம் யாழ்ப்பாண மக்களிற்கு ஏற்ற தொடங்கியுள்ளதைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

சுகாதார ஊழியர்கள் மற்றும் முப்படையினருக்கு உயர்ந்த மரியாதையை தெரிவிப்பதாக தனது ருவிட்டர் பதிவில் சன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் பரவலால் முன்னெச்சரிக்கையாக இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேசில் இருந்து வரும் பயணிகளுக்கு நுழைவுத் தடையை இத்தாலி நீட்டித்துள்ளது.

எனினும் இலங்கை தனது சர்வதேச விமான நிலையத்தை நாளை திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.


No comments