கொழும்பு சென்ற 48பேர் கைது!பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை- அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி, பஸ்ஸொன்றில் வந்துகொண்டிருந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கினியாகல- நாமல்ஓயா பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு (30) பஸ்ஸை வழிமறித்த பொலிஸார், பஸ்ஸில் பயணித்த சகலரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட 48 பேரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments