இந்தியா, இலங்கையிலிருந்து வருவோருக்குத் தடை நீடிப்பு!


இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கம் தீவிரம் அடையத் தொடங்கியதும் இந்தியாவில் இருந்து பயணிகள் இத்தாலி வர தடை விதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்த தடையானது இத்தாலி அரசால் அமல்படுத்தப்பட்டது. மே 31-ம் தேதியுடன் இந்த தடைமுடிவுக்கு வர இருந்தது.  

இந்நிலையில், இந்தியாவில் தொற்று பரவல் குறையாததால் வரும் ஜூன் 21-ம் தேதி வரை இந்த பயண தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை தவிர இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலி வருவதற்கும் ஜூன் 21 வரை  தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்தாலி குடிமக்கள் வருவதற்கு இந்த தடை பொருந்தாது என இத்தாலி அரசு விளக்கம் அளித்துள்ளது.

No comments