சிறீதரன் - டக்ளஸ் குடுமிப்பிடி ஆரம்பம்!



கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அரசியல் போட்டியாளராக இருந்த மு.சந்திரகுமார் ஒதுங்கிக்கொள்ள தற்போது டக்ளஸ் அந்த இடத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கால்வைத்துள்ளார்.

சுயநலன்களுக்காக கிளிநொச்சி வலைப்பாட்டு பிரதேசத்தினைச் சேர்ந்த கடலட்டை பண்ணையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்; டக்ளஸ் தேவானந்தா மீது குற்றஞ்சுமத்தியுள்ளார்.

சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் சாயம்பூசி நியாயப்படுத்துவதுடன், மக்களுக்கு பயன் தரக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை தவறாக திசை திருப்புகின்ற மலினமான அரசியலை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நிறுத்த வேண்டும்.


கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கும் வகையில் கடற்றொழில் சார் பண்ணைகளை உருவாக்குவது தொடர்பாக விரைவான வேலைத் திட்டங்கள் முடுக்கி விடப்பட்டிருக்கின்ற நிலையில், கடலட்டைப் பண்ணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருப்பது வியப்பாக இருக்கிறது.

அவ்வாறான கீழ்த்தரமான அரசியல்வாதியாக நான் என்றைக்குமே செயற்பட்டதில்லை என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments