வெசாக்கும் போச்சு!தேசிய உற்சவம் நயினாதீவு நாக விகாரையில் நடாத்துவதற்கென முன்னேற்பாடுகள் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போதுள்ள கொரோனா பரவல் அதிகரித்த நிலை காரணமாக குறித்த நிகழ்வினை இடை நிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 23 தொடக்கம் 28 வரை தேசிய வெசாக் நிகழ்வினை நயினாதீவு நாக விகாரையில் நடாத்துவதற்கு பாதைகள் சீரமைக்கப்பட்ட தோடு பல்வேறுபட்ட முன்னேற்பாடுகள் இடம்பெற்றதோடு கடந்த வாரம் யாழ் மாவட்ட செயலகத்தில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் தலைமையில் முன்னேற்பாட்டு குழுக் கூட்டமும் இடம்பெற்றது. தேசிய வெசாக் நிகழ்வில் நாட்டின் ஜனாதிபதி ,பிரதமர் பங்குபற்ற விருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments