இலங்கைக்கு சீனாவின் ஒட்சிசன்!இலங்கைக்கு சீனா  ஒக்சிஜன் சிலிண்டர் மற்றும் செயற்கை சுவாச கருவிகளை வழங்கவுள்ளது.

இலங்கைக்கு ஒக்சிஜன் மற்றும் செயற்கை சுவாச கருவிகளை வழங்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் மூலம் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சீன தூதரும் இந்த கோரிக்கைக்கு வழங்குவதற்கு சாதகமாக பதிலளித்துள்ளார், மேலும் அவர்கள் இலங்கைக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, விரைவில் இலங்கைக்கு ஒக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை விரைவில் வழங்க சீனா தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments