காவல்துறையினர் மீது ஏறிய கெப் ரக வாகனம்!


அம்பாறை நகரில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பாறை காவல்நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரியொருவர் காயமடைந்துள்ளனர்.

காவல்துறை அதிகாரி தனது கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அவ்வழியில் பயணித்த கெப் ரக வாகனமொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெப் ரக வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதாகவும் காயமடைந்த காவல்துறை அதிகாரிகள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த வாகன விபத்து தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் அம்பாறை காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

No comments