மலேசியா நோக்கி சென்ற ரோஹிங்கியா அகதிகள், நடுக்கடலில் தத்தளிப்பு: தஞ்சம் வழங்க மறுத்த இந்தியா


நூர் கயாஸ், வங்கதேச அகதிகள் முகாமிலிருந்து வெளியேறி வீட்டில் உள்ள எவரிடம் சொல்லாமல் கடல் பயணத்தின் இடையே அவரது தாய்க்கு சாட்லைட் போன் வழியாக அழைத்திருக்கிறார். அப்போதே தான் மலேசியாவை நோக்கி 87 அகதிகளுடன் மரப்படகில் சென்றுக் கொண்டிருப்பதாக நூர் கயாஸ் தனது தாயிடம் தெரிவித்திருக்கிறார். 

இவ்வாறு பல ரோஹிங்கியா பெண்கள் வங்கதேச முகாம்களில் பாலியல் தொந்தரவுகள், வன்முறைகளுக்கு அஞ்சி வெளியேறியிருப்பதாக ரோஹிங்கியா குடும்பங்கள் தெரிவித்துள்ளன. 

படகில் இருந்த படியே சாட்லைட் போனிலிருந்து அழைத்த நூர், தனது தாயிடம் 40 ஆயிரம் டக்கா(35 ஆயிரம் இந்திய ரூபாய்) ஆட்கடத்தல்காரருக்கு செலுத்த சொல்லியிருக்கிறார். 

நூரின் தாய் பணத்திற்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்த சூழலில், இப்படகின் இயந்திரம் பழுதடைந்து தத்தளித்துக் கொண்டிருப்பது குறித்த தகவல் இந்திய அதிகாரிகளுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த அகதிகளுக்கான உதவி உடனடியாக செய்யப்படாத நிலையில், அவர்களில் 9 பேர் உயிரிழந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. 

வங்கதேசம், மலேசியா, இந்தியா என எந்த நாடுகளும் இந்த அகதிகளுக்கு தஞ்சம் வழங்க முன்வராத நிலையில், அந்த அகதிகளை 2 மாதங்களாக காணவில்லை. கடைசியாக அவர்களுக்கு உதவிய இந்திய தரப்பு, அப்படகு என்னவானது என்றோ அந்த அகதிகள் எங்கே என்பது குறித்தோ எவ்வித தகவலையும் வழங்கவில்லை. இதனால் நூரின் தாயைப் போன்ற பல ரோஹிங்கியா தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்னவானது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர்.  

“ஆழ்கடலில் உள்ள பெரிய படகிற்கு அவர்கள் செல்ல திட்டமிட்டிருந்ததால் அவர்கள் போதிய உணவின்றி கடலில் தத்தளித்து வந்தனர். நாங்கள் அவர்களை மீட்கவில்லை என்றால் அவர்கள் கடுமையான பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள்,” என மற்றொரு வங்கதேச அதிகாரி ஏஎப்பி ஊடக நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

தற்போது மீட்கப்பட்ட இந்த அகதிகள், பாஷன் சர் எனும் ஆபத்தான தீவுக்கு கொண்டு செல்லப்படுவதாக வங்கதேச காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள கூடிய இந்த ஆபத்தான தீவுக்கு 1 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை இடமாற்றும் வங்கதேசத்தின் திட்டம் சர்ச்சைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

ரோஹிங்கியா அகதிகளை ஆட்கடத்தல்காரர்கள் குறிவைப்பதைக் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள முகாம்கள் அமைந்திருக்கும் காக்ஸ் பஜார் பகுதி அருகே உள்ள Teknaf பகுதியின் கவுன்சிலர், “கொரோனா பெருந்தொற்று சூழலினால், மிகக் குறைந்த அளவிலான மீன்பிடி படகுகளே கடலுக்கு செல்கின்றன. இந்த நிலைமையை பயன்படுத்தி ஆட்கடத்தல்காரர்கள் மக்களை கடத்துகின்றனர்,” எனக் கூறியிருக்கிறார். 

No comments