தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி பிரான்சு Saint-Maur-des-Fossés நகரசபை முன்பு கவனயீர்ப்பு

திட்டமிட்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு சிங்களப் பேரினவாத இனவெறிச்சிந்தனை ஆட்சியாளர்களால் ஒடுக்குப்பட்டு அடிமைகள் ஆக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழினம் தொடர்ந்து தனது நீதிக்காகவும் உரிமைக்காகவும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்காலில் தமிழினம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட சாட்சியங்களுடனும் மனித குலத்துக்கு எதிராக சிங்களப்படைகள் அரங்கேற்றிய கொடுரங்களுக்கான சாட்சியங்களுடனும் தமிழ் மக்கள் கடந்த பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக தாய் நிலத்திலும் புலம்பெயர் மண்ணிலும் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.ஐநா சபையில் இலங்கைக்கு எதிராக போர்குற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் போராட்டத்துக்கான நியாயப்பாடுகள் இந்த பூமிப்பந்தில் உணரும் நிலை காணப்படுகின்றது.எனினும் தமிழ் மக்கள் இறுதி இலட்சியத்தை அடைய அயராது போராட வேண்டி உள்ளது.

அந்த வகையில்தான் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன நாளாந்த தொடர் போராட்டத்தை கையிலெடுத்து இனப்படுகொலை சாட்சியங்கள் உலகத்தின் பல தரப்புக்களுக்கும் அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் இன்று பிரான்சு Place Charles de Gaulle, 94100 Saint-Maur-des-Fossés  நகரசபை முன் தமிழினப்படுகொலை ஆதார நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு கவனயீர்ப்பு நடைபெற்றுள்ளது.

No comments