கரை ஒதுங்கியவற்றை கையில் எடுக்கவேண்டாம்!


கொழும்பு துறைமுகத்தை அண்மித்து தீ பரவியுள்ள கப்பலில் இருந்து கரையொதுங்கிய  நூடில்ஸ், கன்டோஸ், உணவுப் பொருட்கள், இரசாயன பொருட்களை கொண்டுசென்றவர்களைத் தேடி பொலிஸார் விசாரணை ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே  தீ பிடித்த கப்பலில் இருந்து கடலில் விழுந்த  கொள்கலன்கள் உட்பட்ட இரசாயன பொருட்கள் நீர்கொழும்பு கடற்கரையை கரைதட்டி வருகின்றது.

அதனை தொடவேண்டாம் என  சமுத்திர சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ள நிலையில் அதனை மீறி    கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மக்கள் கடற்கரையில் கூடி அவற்றை  எடுத்துக் கொண்டு  செல்கின்றனர்.

அவ்வாறு கரை ஒதுங்கிய பொருட்களில் கண்டோஸ் உள்ளிட்டவை இருந்தமையால் சிறார்கள் தனை எடுத்து சென்றுவருகின்றனர். No comments