வடமராட்சியில் சாராயக்கொத்தணி!வடமராட்சியின் நெல்லியடி மத்திய கல்லூரி வீதியில் இயங்கும் மதுபான கடை மூலம் கொரோனா கொத்தணி உருவாக தொடங்கியுள்ளது.

மதுபானசாலையில் பணிபுரியும் காசாளருக்கும், மதுபானக் கடைக்கு முன்பாக இயங்கும் வடை விற்பனையாளருக்கு உதவியாக நின்ற ஒருவருக்கும், கொரோனா தொற்று உறுதி இன்று செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெல்லியடி பேக்கரி மூலம் பரவல் உச்சம் பெற்றிருந்த நிலையில் நெல்லியடி காவல்; நிலைய உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு கிடைத்துள்ளது.

கடந்த 20ம் திகதி துன்னாலை குடவத்தைப் பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி பிறந்த நாள் நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டார். குறித்த பெண்ணுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவரை கைது செய்த 5 உத்தியோகத்தர்களுக்கு இன்று  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எவருக்கும் கொரோனா இல்லை என முடிவு கிடைத்துள்ளது.


No comments