முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் சம்பூர் மக்களின் படுகொலை நினைவுக்கல் தொடர்பான பரபரப்பும்


ஈழத்தமிழர் வரலாற்றில் எப்போதும் மறக்க முடியாத பல ஆயிரம் துன்பியல் சம்பவம் வலியோடும்கண்ணீரோடும் தீராத காயத்தோடும் உறங்கியபடி கிடக்கின்றது. எல்லாவலிகளையும் சேமித்து தந்தது போலமுள்ளிவாய்க்கால் பேரவலமும் எம் ஈழதேசத்தை குருதி ஆற்றில் நனைத்து சென்றது.

2009 மேமாதம் இந்த உலக நட்பு நாடுகளும் எதிரி நாடுகளும் ஒன்றாக ஒரு நேட்கோட்டில் நின்று ஒருஇனப்படுகொலையை செய்தது என்றால் அது ஈழத்தமிழரின் முள்ளிவாய்க்கால் படுகொலையே ஆகும். அந்தகொடூரமான நாட்களை மனதின் மடிப்புகளில் எப்போதும் குருதி கசிந்தபடியே வலிக்கின்றது. வலியைஆற்றுப்படுத்தும் ஒரு மனிதாபிமான உதவியை கூட சுதந்திரமாக செய்வதற்கு இலங்கை அரச இயந்திரம்தனது இருப்புப்பிடியை இன்னும் தளர்த்தவே இல்லை.

ஈழதேசம் எங்கினும் மே மாத நடுப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பும் கண்காணிப்பும் விசாரணைகளும்பிடிவிராந்துகளும் மிக மிக ரகசியமாக இடம்பெறலாயின. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிகள்சிதைக்கப்பட்டும், அப்பகுதிக்கு செல்வதற்கான பயணத்தடையும் விதிக்கப்பட்டது. இதை சர்வதேசமும்பார்த்தும் பாரமுகமாகவே தனது சுயநல அரசியியலை நடத்தியவண்ணம் உள்ளது.

கொரோனா எனும் பெரும் வைரசு தொற்று உயிர்ப்பயத்தை ஏற்படுத்திய போதும், சிங்கள அரச இயந்திரம்இனவாதப் போக்கை இன்றும் இறுக்கமாகவே கடைப்பிடித்து தமிழரின் உரிமையை அழித்தொழிக்கும்வேலையை செய்தவண்ணம் உள்ளது.

இந்நினைவேந்தலில் சம்பூரின் நிலை என்ன?

சம்பூரில் 07.07.1990 களில் அரச இயந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலையின் நினைவாகஒரு நடுகல் நடப்பட்டு, நினைந்து உருகி வணங்கும் ஒழுக்கம் பின்பற்றுவதற்கு அரச இயந்திரத்தின் அனைத்துகிளைகளும் தடைகளை விதித்தன.

நீதிமன்றுகள் கூட பலவிதமான தடையுத்தரவை பிறப்பித்து மக்களை மிரட்டும் தொனியில் செயற்பட்டுவருகின்றன. மேலும் சம்பூர் மற்றும் அதனை அண்டி வாழ்கின்ற பிரதேச உறுப்பினர்களுக்கும் சமூகஆர்வலர்களுக்கும் சில அச்சுறுத்தலை ரகசியமாக ஆற்றும் பணியை அரச இயந்திரம் முழுமூச்சாக இறங்கிஇருந்தது.

சம்பூர் மக்களின் படுகொலை நினைவாக நடப்பட்ட நினைவுக்கல்லை சூழ அரச இயந்திரத்தின்கழுகுப்பார்வை ஆழ ஊடுருவி இருந்தது. ஆதலால் இந்நாட்களில் மட்டும் இம்மே மாத நாட்களில் அவ்விடம்செல்வது பெரும் ஆபத்தாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

ஏன் இந்த நிலை..?

ஈழ மக்கள் தமது உறவினை நினைத்து அழுது புலம்பி தமது மனக்காயங்களின் வலிகளை ஆற்றுப்படுத்துவதுதேசத்துரோகமா? பயங்கரவாத செயற்பாடா? இதற்கு தகுந்த தீர்வை தந்திட யாருளரோ..!

ஈழமக்களுக்கு எப்போது தான் நிம்மதியாக, சுயநிர்ணய உரிமையோடு வாழும் வரம் கிடைக்கும் என்றஏக்கத்தில் அறுபது வருட போராட்ட வாழ்வின் காயங்களை தாங்கியபடி மக்களும் வாழ, காலமும் எவ்விததீர்வையும் எட்டிவிடாதபடி நகருகின்றதே மிகவும் துயரமாகும்.

- ரேணுகேசன் ஞானசேகரம் -

No comments