மேதின பேதி: ஹெலிகாப்டர்கள் வட்டம்!உலக மே தினமன்று தொழிலாளர்களது மூச்சுக்காற்று கூட பரவிவிடக்கூடாதென கண்காணிப்பை பலப்படுத்தியிருந்தது இலங்கை அரசு.

அதனை கண்காணிக்க கொழும்பு நகரை சூழ சில ஹெலிகாப்டர்கள் சுற்றி வட்டமிட்டதாக கூறப்படுகின்றது.

மேற்படி ஹெலிகாப்டர்கள் பொறளை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

நாட்டில் கொரோனா அச்சம் உள்ளதால் மே தினத்தை முன்னிட்டு வழமையாக நடத்தப்படும் ஊர்வலம் மற்றும் கூட்டங்களை அனைத்து கட்சிகளும் நிறுத்தியுள்ளன.

எனினும் சிலர் கூட்டங்களை மாத்திரம் நடத்த முயற்சி செய்ததாக  தெரிவித்து, அதனை கண்காணிக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது 


No comments