இப்போதைக்கு இலங்கையில் சாத்தியமில்லை!இலங்கையில் கற்றல் செயற்பாடுகள் தற்போதைக்கு வழமைக்கு திரும்பும் சாத்தியமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

சகல பாடசாலைகளும், முன்பள்ளி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகள் யாவும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என கல்வியமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளாhர்.

இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மற்றும் அக்கராயன்குளம்  பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 21 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பொலிஸ் நிலையம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதோடு அதனுடன் தொடர்பிலிருந்தவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் நோய் அறிகுறிகள் தென்படுகின்ற போது உடனடியாக  தங்களை பரிசோதனைக்குட்படுத்திக்கொள்ளுமாறும்  சுகாதார துறையினர்கேட்டுக்கொண்டுள்ளனர்.


No comments