மேலுமிரு வார முடக்கம்:கோத்தா மறுப்பு!



கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணியிலிருந்து நாளை அதிகாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நாளை நீக்க எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயணத் தடை விதிக்கப்பட்ட குறித்த காலப்பகுதியில் மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

எனினும் பயணத் தடைகள் நீக்கப்பட்ட பின்னரும் மக்கள் ஒன்று கூடாமல், சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் 2-3 வாரங்களில் மக்கள் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி செயற்பட்டால், கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கையில் நிலவரம் நாளுக்கு நாள் முடக்க நிலையை அடைந்துவருகின்ற நிலையில் அடுத்த இரு வாரத்திற்கும் முழு நேர பயண தடைகளை அமுல் படுத்துவது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார். 

மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்புக்களது அழுத்தத்தையடுத்து முடக்கத்தை மேலும் இருவாரம் நீடிக்க இலங்கை அரசு முடிவு செய்யுமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது..

நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்த கோத்தபாய தனது நிலைப்பாட்டை மாற்ற மறுத்துவிட்டார்.


No comments