முடங்குகின்றது இலங்கை:பேருந்து சேவை நிறுத்தம்!மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து நேற்று (10) நள்ளிரவு முதல் இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது

இதனிடையே இன்று (11) நள்ளிரவு முதல் எதிர்வரும் (மே) 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும்  என இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்;. 

மேலும் கொரோனா நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கைக்கு அமைய சில வேளைகளில் மாகாணங்களுக்கு உள்ளேயும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என இராணுவத்தளபதி கூறியுள்ளார்.

இதனிடையே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் பிரிவிடம் அம்மாகாண அளுநர் அநுராதா யஹம்பத் கோரியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மாலை 6 மணிக்குப் பின்னர் மூடுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், மாலை 6 மணிக்குப் பின்னர் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்ந்த ஏனையக் காரணங்களுக்காக மக்கள் நகருக்குள் வருவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பாதுகாப்புப் பிரிவிடம் கோரியுள்ளார்.


No comments