யாழில் அலுவலகங்கள் தொடர்ந்து முடக்கம்!

 


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 37 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை (மே 10) கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஊர்காவற்றுறை பிரதேச செயலக ஊழியர்கள் 29 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலக திட்டமிடல் கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் 29 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். திட்டமிடல் கிளையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

திட்டமிடல் கிளையில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இனம்காணப்பட்டதை அடுத்தே சுகாதார பிரிவு அக்கிளையில் கடமையிலிருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே பருத்தித்துறை நகரசபையும் சுகாதாரப்பகுதியால் முடக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபை உத்தியோகத்தர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப்பெற்ற அறிக்கையில் கொரொனா தெற்று ஏற்பட்டமை தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை நகரசபை முடக்கப்பட்டு அங்கு பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.


No comments