இத்தாலியில் கேபிள் கார் விபத்து! குழந்தை உட்பட 14 பேர் பலி!!

வடக்கு இத்தாலியின் மாகியோர் ஏரி அருகே ஒரு மலையில் கேபிள் கார் விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட பதினான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் ஒரு  படுகாயமடைந்துள்ளது.

ரிசார்ட் நகரமான ஸ்ட்ரெசாவிலிருந்து பீட்மாண்ட் பிராந்தியத்தில் அருகிலுள்ள மொட்டரோன் மலை வரை பயணிகளை ஏற்றிச் செல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கேபிள் கார் விபத்தின் போது செங்குத்தான உயிரமான மரங்கள் உள்ள பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளது.

உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவர்களும் உள்டங்குவதாக ஸ்ட்ரெசாவின் மேயரான மார்செல்லா செவரினோ தெரிவித்துள்ளார்.

விபத்தின் பின்னர் படுகாயமடைந்த ஐந்து மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு குழந்தைகள் விமானத்தில் டுரினில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒன்பது வயது குழந்தை சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐந்து வயது குழுந்தை நினைவுடன் இருப்பதாகவும்   பல எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

No comments