செல்பி தோழர்: தியேட்டருக்கு மருந்தடிப்பு!


இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்து மத குருக்கள் யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்த நிலையில் அவரது அலுவலகம்

தொற்றுநீக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுகாரணமாக நயினை நாகபூசணி அம்மன் கோவில் ஆதீனகுருக்களும், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலய பிரதம குருவும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவசிறி சம்பு மஹேஸ்வரக் குருக்கள் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தை மையப்படுத்தி கொரோனா தொற்று இந்து மதகுருமாரிடையே வேகமாக பரவிவருகின்றது.

மறைந்த மதகுருவின் மகன் நயினாதீவு ஆலயத்துடன் தொடர்புட்ட கொரோனா தொற்றாளியாக அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தந்தையார் மரணித்துள்ளார்.இதனிடையே யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம்  இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

டக்ளஸ் அலுவலகத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்து மதகுருமார் ஒன்றியம் சார்பில் பெருமளவு மதகுருமார் டக்ளஸை சந்தித்து உரையாடியதுடன் குழு புகைப்படமும் எடுக்கப்பட்டிந்தது

இந்நிலையில், பிராந்திய சுகாதாரத் தரப்பினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கடற்றொழில் அமைச்சரின் அலவலகத்தினை தொற்று நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments